இக்கொலை வழக்கு சம்ந்தமாக 1.பார்த்தசாரதி 27, த/பெ தேவநாதன் புதுக்கடை, 2. சுந்தர் (எ) கார்த்திக்கேயன் 24, த/பெ முருகன், சிங்கிரிகுடி 3.அர்சுனன் (எ) ஆனந்த் த/பெ கிருஷ்ணன் புதுக்கடை. 4. சிலம்பரசன் 5. சந்தோஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்
கைது செய்யப்பட்ட பார்த்தசாரதி என்பவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 6 வழக்குகள் உள்ளன. சுந்தர் (எ) கார்த்திகேயன் என்பவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. அர்ஜுனன் (எ) ஆனந்த் என்பவர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் என 5 வழக்குகள் உள்ளன. இவர்களின் குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அ. அருண்தம்புராஜ் மூவரையும் ஓராண்டு காலம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் வைக்க ஆணையிட்டதின்பேரில் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள்.
No comments:
Post a Comment