காலையில் ஆலோசனை மதியம் கைதான கடலூர் ஆர்டிஓ. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 May 2023

காலையில் ஆலோசனை மதியம் கைதான கடலூர் ஆர்டிஓ.


கடலூர் மாவட்டம் பத்திக்கோட்டை சேர்ந்த வெங்கடாஜலபதி வயது( 35), த/பெ சுப்பிரமணியன் என்பவர் கடந்த 30 5 2023 ஆம் தேதி கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி புகார் மனு ஒன்றினை கொடுத்தார் அந்த புகார் மனுவில் தனது நண்பர் செல்வராஜ் என்பவர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழில் செய்யலாம் என சென்னையில் இருந்து TN 05 BW 2007, என்ற வாகனத்தை சென்னையில் இருந்து வாங்கி வந்து பெயர் மாற்றம் பெயர் மாற்றம் தகுதிச் சான்று மற்றும் பிற வேலைகளை செய்வதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய பணம் ரூபாய் 2, 050 இணைய வழி மூலம் செலுத்தி ரசீதைப் பெற்று கடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுத்துள்ளார். 

இந்த விண்ணப்பம் தொடர்பாக கடலூர் ஆர்டிஓ வை சந்தித்தபோது அவர் மற்றும் தகுதி சான்றிதழ் பணியை முடித்துக் கொடுக்க அவரிடம் 5500 கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத காரணத்தினால் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் மனு கொடுத்ததின் பெயரில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் க்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

31.5.2023 ஆம் தேதி புகார்தாரர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் லஞ்சம் பணம் ரூபாய் 5500 கொடுத்தபோது மறைந்திருந்த கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  தேவநாதன்  தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி  சுதாகர் என்பவரையும் அவருக்கு உதவியாக லஞ்சப் பணத்தை பெற்று வைத்திருந்த  சிவசங்கர் என்றழைக்கப்படும் குள்ள சிவா என்பவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 


அதனைத் தொடர்ந்து போலீசார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை சோதனை செய்து கணக்கில் வராத லஞ்சப்பணம் ரூபாய் 2,50,000 பணத்தை பணத்தை கைப்பற்றினார்கள். மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகர் என்பவருக்கு சொந்தமான சென்னை மற்றும் கடலூரில் உள்ள வீடுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். காலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கடலூர் பகுதியை சேர்ந்த கழிவு சுத்தம் செய்யும் டேங்கர் லாரி  உரிமையாளர்கள் உடன் ஆலோசனைகள் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment