இருந்தபோதும் திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த தனியார் பேருந்து, கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு சென்ற பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தின் போது, இடி இடித்தது போல் பலத்த சத்தம் எழுந்தது. இதில் 2 தனியார் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். விபத்தில் 2 பேருந்தின் முன்பக்கமும் முற்றிலும் சேதமடைந்தது. முன்பக்க இடிபாடுகளுக்குள் இடையே பயணிகளும், நடத்துநர் மற்றும் ஓட்டுனர்கள் சிக்கினர். இதில் இதில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் அங்காளமணி (வயது 33), திருவெண்ணைநல்லூர் முருகன் (45), பண்ருட்டி சேமக்கோட்டையை சேர்ந்த சீனுவாசன் (55) என்பது தெரியவந்தது.
மேலும், ஒருவர் அடையாளம் தெரியவில்லை. இவரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேருந்துகளிலும் பயணம் செய்த 70-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தது. மேலும், பண்ருட்டி போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு வந்த பஸ் டிரைவரை மீட்க முடியாத நிலை உருவானது. இவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வந்தார். உடனடியாக தீயணைப்பு படை வீரர்களும், கிரேன், பொக்லைன் போன்ற எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது. இதில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பண்ருட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர். காலை 10 மணிக்கு நடந்த விபத்தின் மீட்பு பணிகள் 12 மணியளவில் முடிந்தது. படுகாயமடைந்தவர்களில் ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment