கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் வழிக்காட்டுதலின்படி கூடுதல் இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு மேற்பார்வையில் திங்கட்கிழமை (22-5-2023) அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அரசு அலுவலர்களுக்கு சைபர் கிரைம் சம்மந்தமாக விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை ஆய்வாளர் திருமதி.கவிதா வழங்கினார்.
இக்கூட்டத்தில் வருவாய் துறை சேர்ந்த ஊழியர்கள் 100 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் பணத்தை பெறுவதற்கு எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்றும் சைபர் குற்றங்கள் குறித்து 1930 இலவச எண் மூலமும் இணையதளங்கள் மூலமாக புகார் அளிப்பது எப்படி என்றும் சைபர் குற்றம் சம்மந்தமான இலவச எண் 1930 டீ பி யாக வைத்துக்கொள்வது குறித்தும் இணையவழி குற்றம் சம்மந்தமாக இலவச அழைப்பு எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in இணையத்தளத்தில் புகார் அளிப்பது குறித்து ஆய்வாளர் திருமதி.கவிதா விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்
No comments:
Post a Comment