தன்னம்பிக்கையால் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவி இரு கைகளும் செயலிழந்த நிலையிலலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 May 2023

தன்னம்பிக்கையால் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவி இரு கைகளும் செயலிழந்த நிலையிலலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை.


கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியில் வசித்து வரும் முருகன் வளர்மதி தம்பதியினரின் மூத்த மகள் கிருத்திகா இவர் வடலூரில் உள்ள பெண்கள் அரசினர் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார்.

இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில் 456/500 மதிப்பெண் பெற்று தன் பள்ளியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார், தனது இரண்டு வயதில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்த நிலையில் பின்னர் அவர் வடலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்து வந்தார்


இவரது தந்தை பார்வதிபுரம் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கிருத்திகா இரு கை கால்கள் செயலிழந்த நிலையில் தனது சொந்த முயற்சியாலும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலினாலூம்  தேர்வு எழுதி பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்


மேலும் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களின் முழு முயற்சியாலும் ஒத்துழைப்பாலும் என்னால் சாதிக்க முடிந்தது என்று நம்மிடம் தெரிவித்த கிருத்திகா ஐஏஎஸ் படிப்பதே தனது லட்சியமாக கொண்டுள்ளார், அவரது தங்கையும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் மேலும் கிருத்திகா பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளார்.


தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு கிருத்திகா ஒருவரே எடுத்துக்காட்டாக திகழ்கிறார், மேலும் தனது சாதனையை தொடர்ந்து அவர் பதினொன்றாம் வகுப்பில் பயோ மேக்ஸ் பாட பிரிவை தேர்வு செய்து படிக்க விரும்பதாக தெரிவித்துள்ளார்.


இவருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து உதவி செய்து வந்தது அந்த பள்ளியில் பணி மேற்கொள்ளும் ஆசிரியரான நந்தகுமார் இவர் அந்த மாணவிக்கு தேவையான உதவிகளை தக்க சமயத்தில் மேற்கொண்டு உறுதுணையாக இருந்ததாக தெரிவித்த கிருத்திகா மேலும் பல சாதனைகளை புரிந்து எனது பள்ளிக்கு பெருமை சேர்ப்பதே எனது லட்சியம் என்று கூறியுள்ளார்


பின்னர் இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணசெல்வி அவர்களிடம் கேட்டபொழுது எங்கள் பள்ளியில் ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சியால் பல வளர்ச்சி பணிகளை செய்து வருகிறோம் இதன் ஒரு பகுதியாக எங்கள் பள்ளியில் பணிபுரிந்து வரும்   ஓவிய ஆசிரியர் ஒருவர் எங்களது பள்ளியின் செயல்பாடுகளை கண்டு பள்ளியின் சுவர்களில் தாமாக முன்வந்து தனது சொந்த முயற்சியால் தலைவர்களின் படத்தையும் போஸ்கோ விழிப்புணர்வு குறித்த வரைந்து கொடுத்துள்ளார்.


மேலும் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு அதிக அளவில் உள்ளது இதற்கு காரணம் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும்  பெற்றோர்களும் தான் என்று தெரிவித்தார் மேலும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களுக்கும்  பெற்றோர்களுக்கும் என தெரிவித்தார்.


மேலும் பள்ளியில் இரண்டாம் இடத்தை பிடித்த கிருத்திகா கூறுகையில் நான் இந்த சாதனையை  மேற்கொண்டதற்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் சக தோழிகள் என பெருமிதமாக தெரிவித்தார் . 

No comments:

Post a Comment

*/