என்எல்சியால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம இளைஞர்கள் வைத்த டிஜிட்டல் பேனரால் பரபரப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 May 2023

என்எல்சியால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம இளைஞர்கள் வைத்த டிஜிட்டல் பேனரால் பரபரப்பு


எங்கள் கல்யாண கனவில் கல் எறிந்த கவுன்சிலருக்கு நன்றி நன்றி. 

என்எல்சியால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம இளைஞர்கள் வைத்த டிஜிட்டல் பேனரால் பரபரப்பு




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புஅருகே என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன் வளையமாதேவி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் என்எல்சி நிர்வாகம் நிலம் மனைகளை கையகப்படுத்தி வருகிறது.இந்நிலையில் இதனால் பாதிக்கப்படும் கிராம மக்கள் சமகால இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை என கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.ஆனால் இதற்கான தீர்வுகளும் இதுவரை எட்டப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் பல கட்ட போராட்டங்களை நடத்திப் பார்த்தும் இன்னும் எவ்விதமான ஒரு நிரந்தர தீர்வும் கிடைக்கவில்லை என்னும் வேதனையில் கரிவெட்டி கிராம இளைஞர்கள் தங்களது கிராமத்தில் தங்களது வேதனையை வெளிப்படுத்தும் விதமாக டிஜிட்டல் பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.



உறவினர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் நன்றி நன்றி என தெரிவித்து ஆரம்பிக்கும் அந்த டிஜிட்டல் பேனரில்


எதிர்காலத்தை கணிக்கத் தெரியாமல் பாமர மக்களை குழப்பி பிரித்தாலும் சூழ்ச்சியை கையாண்டு வரும் என்எல்சி நிர்வாகத்திற்கு நன்றி



கரிவெட்டி கிராமத்தை போட்டி போட்டுக் கொண்டு எடை போட்டு விற்கத் துடிக்கும் இடைத்தரகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..



என்எல்சியால் பாதிக்கப்படும் கிராம இளைஞர்களுக்கு நிரந்தர வேலை கிடைத்து விட்டால் அவர்கள் முன்னேறி வளர்ந்து விடுவார்கள் என்பதால் அவர்களுக்கு உத்தரவாதம் இல்லாத வேலையை அறிவித்து அவர்களை முடக்கி போட முயலும் அதிகாரிகளுக்கு நன்றி




எங்கள் கல்யாண கனவில் கல்லெறிந்த கவுன்சிலருக்கு நன்றி நன்றி  என தங்களுடைய பல்வேறு வேதனைகளை குறிப்பிட்டு அந்த பேனரை வைத்துள்ளனர்.



இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது..

No comments:

Post a Comment

*/