துணை ஆட்சியர் கா .சங்கர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக மேலாளர் ஜே.ஜான்சி ராணி பாராட்டுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆனந்தி வரவேற்புரையாற்றினார். பள்ளியின் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர்கள் கே. விஜயராகவன் டாக்டர் எஸ். ஆஷா ஆகியோர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், தேவநாதன், கே. எஸ். நரசிம்மன் ஒன்றியதுணை பெருந்தலைவர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் பணி நிறைவு பாராட்டு விழாவில் ஓவியர் ரமேஷ், தங்க.சுதர்சனம், கே. எஸ்.வேலுமணி, இளம்பருதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கூத்தப்பாக்கம் சிவ நாட்டியாலயா கலைக்கூடமாணவிகள் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் ஏ. மரிய ஜோசப் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியினை ஆசிரியை வேல்விழி தொகுத்து வழங்கினார். இறுதியில் ஆசிரியர் அன்புக்கரசி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment