நெய்வேலியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 May 2023

நெய்வேலியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா


நெய்வேலியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா



கடலூர் மாவட்டம் நெய்வேலி மத்திய  பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை யில் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சங்க கொடி ஏற்று விழா நடைபெற்றது. 


இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜிகே மணி அவர்கள் கலந்து கொண்டு சங்க கொடி ஏற்றி புதிய பெயர் பலகை திறந்து வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.


நிகழ்வில் ஜி கே மணி அவர்கள் பேசுகையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடெங்கும் உலகெங்கும் நினைவு கூறுகிற வகையில் தமிழ்நாட்டில் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகி இருக்கிறது இதற்கு காரணம் சட்டமன்றத்தில் தொழிலாளர்களின்   8 மணி நேரம் வேலை என்பது 12 மணி நேர வேலை என்ற சட்டம் தமிழக அரசு அறிவித்த  நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் இதனை எதிர்த்தது சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தனர் அதையும் தாண்டி சட்டமாக்கப்பட்டது பின்னர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு தொழிலாளர்கள் கொந்தளிப்பை உணர்ந்த தமிழக முதலமைச்சர் அவர்கள் அந்த சட்டத்தை திரும்ப பெற்று இருக்கிறார்கள் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் வற்புறுத்தி கேட்டுக்கொள்வது எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் அச்சட்டம் திரும்ப வரக்கூடாது தொழிலாளர் உரிமை காக்கப்பட வேண்டும் தொழில் முதலீடுகள் அதிகம் தேவை தொழிற்சாலைகள் தொழில் வளர்ச்சி கட்டாயம் வேண்டும் இப்படி தொழிற்சாலையை மேம்படுத்துகிற வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அதே வேளையில் தொழிலாளர் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே நாம் உறுதியாக இருக்க வேண்டும் சட்ட ரீதியாக மனிதாபிமான அடிப்படையில் தொழிலாளர்கள் உரிமை காக்கப்பட வேண்டும்  என்று பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இறுதியில் அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்களுக்கும் தனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*/