கடலூர் மாவட்டம், கடலூர் ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி சரவணன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கடலூர் புதிய பேருந்து நிலையம் குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.புதூர் பகுதிக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடலூர் புதிய பேருந்து நிலையம் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் நத்தவெளி பகுதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடம் ஒதுக்காததால் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் கண்ணீர் விட்டு அழுது கோரிக்கை வைத்தார்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தலைவர் ஜல்லி சரவணன் பேசுகையில் பொதுமக்கள் கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அனைத்து சமூக மக்களின் கோரிக்கையான மயான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் நான் தவறு செய்தால் கேளுங்கள் திருத்திக் கொள்கிறேன் ஆனால் கூட்டத்தில் உங்கள் குறைகளை மட்டுமே கூறவேண்டும் அதைவிட்டு எந்தவித தனி நபரின் விமர்சனங்கள் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
No comments:
Post a Comment