கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றியம் இலங்கியனூர் ஊராட்சி ஆதிதிராவிட நலப் பகுதியில் சுமார் 350 க்கு மேற்பட்ட குடும்பங்கள் 35 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் பல பேர் அரசு கட்டிடங்கள் மற்றும் நிழற்குடைகளிலும் இரவு நேரத்தில் தூங்குகின்றனர். மேலும் மணிமுத்தா நதிக்கரை ஓரமாக தாழ்வான பகுதி வசித்து வருவதாலும் மழைக்காலங்களில் மழை தண்ணீர் ஊருக்கு சூழ்ந்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே கூட்டு குடும்பமாக வசித்துள்ளதால் பல பிரச்சினை உருவாக்கி பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது இலங்கியனூர் கிராமத்திற்கு இது நாள் வரை அரசு இலவச மனை பட்ட வழங்கவில்லை என்றும் கிராம மக்களின் அவல நிலை புரிந்து கொண்டு எங்கள் கிராமத்திற்கு இலவச மனபட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய குடியரசு கட்சி மாநில இணைபொது செயலாளர் மங்காபிள்ளை, மாவட்டத் தலைவர் கதிர்வேல், நகர தலைவர் ராஜேந்திரன், ஆசிரியர் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் பவுண்டேஷன் செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆறுமுகம், இலங்கியனூர் ஊராட்சியைச் சார்ந்த நல்லூர் ஒன்றிய துணை தலைவர் செந்தில் குமார், மற்றும் மகேந்திரன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment