கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் அனைத்து கட்சி சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பொதுக் கல்வித்துறையோடு இணைப்பதை கைவிடக்கோரியும், ஆதிதிராவிடர் பள்ளிகளை மேலாண்மை செய்திட பொதுக்கல்வித்துறை போன்று தனிக்கல்வி துறை உருவாக்கிடு, ஆதிதிராவிடர் நலத்திட்டங்களை நடைமுறை படுத்துவதில் வருவாய்த்துறை தலையிடுவதை கைவிட்டு முற்றிலும் தனி நிர்வாகத்தை உருவாக்கிடு, ஆதிதிராவிடர்களுக்கு தரப்படும் மத்திய அரசின் சிறப்பு நிதிகள் முழுவதையும் ஆதிதிராவிடர்களின் நல மேம்பாட்டிற்கு மட்டுமே செலவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் ஆதி அறக்கட்டளை நிறுவனர் திருமாறன், இந்திய குடியரசு கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் மங்கா, பிள்ளை பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் அய்யாசாமி, ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன், தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் மாய முனுசாமி, பகுஜான் சமாஜ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வன், இந்திய குடியரசு கட்சி (எம்) வீரமணி, ஆதி அறக்கட்டளை ராஜேந்திரன், அகில இந்திய பழங்குடி மக்கள் கட்சி செல்வராஜ், கொளவாய் சுப்பிரமணியன், ஆதி அறக்கட்டளை வீரச்செல்வன், எழில்வான் சிறப்பு, சேப்பாக்கம் பிரகாஷ், மருதூர் வீரமணி, புரட்சி பாலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment