கடலூரில் அதிமுக கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் ராமச்சந்திரன் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும்முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் சம்பத் பேசுகையில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத 12 மணி நேர வேலை மசோதாவை யாரிடமும் எந்தவொரு ஆலோசனை பெறாமல் வெறும் குரல் வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் மசோதாவை நிறைவேற்றி விட்டு அதை திரும்ப பெற்றது வெட்க கேடான விஷயம் என்றும் கடலூர் புதிய பேருந்து நிலையம் அணைத்து தரப்பு மக்களின் எதிர்ப்புகளை மீறி கடலூர் தொகுதியை புறக்கணித்து குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாற்றியது வேதனையான விஷயம் என்றும் கடலூர் மாநகராட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று காரசாரமாக பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி .ஜே .குமார், ஆர்.வி.ஆறுமுகம், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே காசிநாதன் கடலூர் மாநகர பகுதி செயலாளர் முதுநகர் வ. கந்தன், திருப்பாதிரிப்புலியூர் கெமிக்கல் மாதவன், கடலூர் துறைமுகம் தங்க வினோத் ராஜ், மஞ்சகுப்பம் வெங்கட்ராமன், புதுப்பாளையம் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment