மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 May 2023

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு

 

நிலப் பிரச்சினை காரணமாக பெண்ணை கடுமையாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.கடலூர் சாத்தகுப்பம் அடுத்த குறவன் பாளையம் பகுதியைச் சார்ந்தவர் சின்னதுரை.இவரது சகோதரர் தேவநாதன். இவர்களது பூர்வீக நிலம் நிலம் 42 செண்ட் கூட்டு பட்டாவில் உள்ளது. இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த நடேசன் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.இதனையடுத்து தங்கள் நிலத்தில் தென்னங்கன்று வைத்து எள்ளு மற்றும் உளுந்து சாகுபடி செய்து வந்த நிலையில் அங்கு வந்த வி.காட்டுபாளையம் பகுதியைச் சார்ந்த பத்ராச்சலம் அவரது மனைவி கவிதா மற்றும் குறவன் பாளையம் பகுதியைச் சார்ந்த பாக்கியராஜ் ஆகியோர் அங்கு சென்று தேவநாதனின் மருமகளான பவானி என்பவரை கடுமையாக தாக்கி தென்னங்கன்றுகளை பிடுங்கி வீசி தகராறு செய்துள்ளனர்.இதனை அடுத்து பவாணி சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது பிரச்சனை தொடர்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமை சந்தித்து பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சின்னதுரை மனு அளித்தார்

No comments:

Post a Comment