காட்டுமன்னார்கோயில் அருகே தனியார் பைனான்ஸ் நிறுவனம் வாங்கிய கடனை திரும்ப கட்ட சொல்லி நெருக்கடி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 May 2023

காட்டுமன்னார்கோயில் அருகே தனியார் பைனான்ஸ் நிறுவனம் வாங்கிய கடனை திரும்ப கட்ட சொல்லி நெருக்கடி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை


காட்டுமன்னார்கோயில் அருகே தனியார் பைனான்ஸ் நிறுவனம் வாங்கிய கடனை திரும்ப கட்ட சொல்லி நெருக்கடி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை


உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு உறவினர்கள் சிபிஎம் கட்சியுடன் போராட்டம



கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சக்கரவர்த்தி காலனியில்  தாய் மற்றும் மனைவி ஒரு வயது குழந்தையுடன் ராஜசேகர் வசித்து வருகிறார் .


இவருக்கு திருமணம் ஆகி இரண்டு  வருடங்கள் ஆகின்றன. தற்போது மனைவி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் குடும்ப செலவிற்க்காக அதே பகுதியில் வசித்து வரும் சாந்தி என்பவரிடம் பணம் கேட்டு உள்ளார்.


சாந்தி  குமராட்சி பகுதியில் இயங்கி வரும் மதுரா என்கிற தனியார் மகளிர் சுய உதவிக் குழுவில் அந்த பகுதி தலைவியாக இருந்துள்ளார் .இந்நிலையில் குழு மூலம் ரூபாய் 50,ஆயிரம்  கடனாக  வட்டிக்கு  மாதம் ரூபாய் 2472 ரூபாய் வீதம்  இரண்டு வருடங்கள் கட்ட வேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில் ராஜசேகர் குடும்பத்தினருக்கு வாங்கி தந்துள்ளார்.


அதனையடுத்து  கடந்த  இரண்டு மாதம் வரை ராஜசேகர்  குடும்பத்தினர் தொடர்ந்து மாத தவனையை செலுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இரண்டு மாத தவனையை உடனே செலுத்துமாறு மதுரா மகளிர் குழுவினர் நேற்று  இரவு 7 மணிக்கு அவரின் வீட்டில் சென்று ஆபாசமான வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.


மேலும் உங்கள் உயிரைக் கொடுத்தாவது பணத்தை கட்டிவிட வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து ராஜசேகரின் தாயாரும், மனைவியும் அவர்களிடம் நாளை அதாவது இன்று  12 மணிக்குள் கட்டி விடுகிறோம் என கெஞ்சி உள்ளனர்.


அதனையடுத்து  மதுரா மகளிர் குழுவை சேர்ந்த  வசூல் செய்பவர்கள் வீட்டில் உள்ளே நுழைந்து அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.


இதனை இருந்து அங்கு வந்த ராஜசேகர் அவமானம் தாங்க முடியாமல் வீட்டின் உள்ளே சென்று கதவை தாழிட்டுள்ளார்..

இதனைப் பார்த்த  குடும்பத்தினர், மற்றும் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார்.


உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அப்பொழுது மருத்துவர் பரிசோதிக்கும் போது

இவர் ஏற்கனவே இறந்துள்ளதாக கூறியுள்ளனர்

இதனை  தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கொள்கை பிரகாஷ் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட்  கட்சி மாவட்ட செயலாளர். வெற்றி குமார் 

மற்றும் இறந்து போன ராஜசேகர் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர் தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீசார் நம்பர் இடத்தில் வந்து பேச்சுவார்த்தை செய்தனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது



மேலும் இந்த பகுதி மக்கள் கூறியதாவது பணம் வசூல் செய்ய வரும் நபர்கள் தனிப்பட்ட முறையில் பெண்களின் செல் போன் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களிடம் தனிப்பட்ட முறையில் இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் பேசுவது


ஒரு கட்டத்தில் தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டு தொந்தரவு செய்வதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள் மேலும் அன்றைய பொழுதில் பணம் கட்ட வில்லை என்றால் இரவு நேரங்களில் 11 மணி வரை தொந்தரவு செய்வதாகவும் கூறி குறைந்த முன்பணத்தில் இருசக்கர வாகன கடன் என்று பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தி வாகனத்தை கொடுத்துவிட்டு அவர்களிடம் மாதம் தவணை கட்டுவதற்கு நாட்கள் கடந்து போனால் அடியாட்களை வைத்து இரு சக்கர வாகனங்களை மறைமுகமாக எடுத்துக்கொண்டு செல்கின்றனர் பின்பு பணம் கட்டியவர்கள் பரிதவித்துக் கொண்டு வேலைகளுக்கு செல்வதற்கு வழியில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர் இதனால் பல குடும்பங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு மர்மமான முறையில் இது போன்று இறப்பது வாடிக்கையாக உள்ளது. 


அதுபோல தொடர்ந்து பணம் கட்டி வந்தாலும் கடைசி இரண்டு தவணை மூன்று தவணை உள்ள நிலையில் வாகனங்களை குண்டர்களை வைத்து அடியாட்களை வைத்து மிரட்டி வாகனத்தை பறிமுதல் செய்து விடுகின்றனர் அப்போது விவசாயிகள் வாகன உரிமையாளர்கள் கட்டிய பணம் வீணாகப் போய் விடுகிறது எவ்வளவு வட்டி கொடுத்து கட்டி வந்தாலும் ஒரு நாள் பணம் கட்ட வில்லை என்றால் வாகனத்தை திருடுவது போல் எடுத்துச் சென்று விடுகின்றனர் இதனால் மன உளைச்சலில் அவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு பல பேர் இறந்துள்ளனர் இது இந்த பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது


இது சம்பந்தமாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குண்டர்களை வைத்து தாக்குவதும் வண்டிகளை திருடுவது போல் எடுத்துச் செல்வதும் தடுத்து நிறுத்த வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

No comments:

Post a Comment

*/