விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 49 வது ஆண்டு பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசு கிறிஸ்துவின் பாடல்களை பாடியபடி கொடியை பவனியாக எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து ஆலயத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் முன்னாள் சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயர் கொடியை ஏற்றினார்.
அப்போது கூடியிருந்த கிறிஸ்தவர்கள் மலர் தூவி வழிபட்டனர். இதையடுத்து பாத்திமா அன்னை ஆலய பங்குதந்தை பால் ராஜ் குமார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. வருகிற 12ந் தேதி வரை தினந்தோறும் சிறிய தேர்பவனி மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகின்ற 13 ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு புதுவை கடலூர் உயர் மறை மாவட்ட பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்து கொண்டு திருவிழா திருப்பலி நடத்துகிறார்.
மேலும் 300 பேருக்கு வான் விருந்து நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அன்று மாலையில் முதல் முறையாக மிகப்பெரிய ஆடம்பர தேர் பவனியில் பாத்திமா அன்னை எழுந்தருள மாலை 6 மணிக்கு கல்லறையில் இருந்து விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலயம் வரை தேர் பவனி நடைபெறுகிறது. 14-ந் காலை 6 மணிக்கு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment