கடலூர் தனியார் பஸ் தொழிலாளர்கள் நலசங்கத்தின் சார்பாக கடலூர் பேருந்து நிலையத்தில் மேதின விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.குருராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர்ஏ.ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார், துணைதலைவர்கள் கபாலி, புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் சிறப்புரையாற்றினார். மாநகராட்சிமேயர் சுந்தரி ராஜா வாழ்த்துரை வழங்கினார். துணை மேயர் பா.தாமரைச்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் ஏ.எஸ்சந்திரசேகரன், சட்ட ஆலோசகர் தி.ச.திருமார்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கே.எஸ்.ராஜா, ஒருங்கிணைப்பாளர் எஸ்.என் கே.இரவி . கடலூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஓவியர் ரமேஷ், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், சிவாஜி பேரவை தலைவர் சிவாஜிகணேசன், மீனவர் சங்கத் தலைவர் சுப்பராயன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment