கடலூர் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பண்ருட்டி வடலூர் சாலையில் வடக்குத்து பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலானூர்.மணிகண்டன் தலைமை தாங்கினார். கடலூர் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணித்தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாவட்ட பிரிவு தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மண்டல் மையக்குழு உறுப்பினர்கள், அனைத்து மகளிர் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மக்கள் விரோத திமுக அரசின் சாராயக் கடைகளை மூட வலியுறுத்தியும் தமிழகத்தில் ஆறாக ஓடும் கள்ள சாராயத்தை தடுக்க தவறிய திறனற்ற திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கடலூர் மாவட்டத்தில் உள்ள முந்திரி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான முந்திரி உடைக்கும் நிறுவனங்கள் உள்ளூர் விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நெய்வேலி நிலக்கரி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு அவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- திமுக ஆட்சியில் இந்து அறநிலைத்துறையில் 3000 ஏக்கர் மீட்டதாக தகவல் கூறியதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- புதிய திட்டங்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment