கடலூர் செம்மண்டலத்தில் எவர்கிரீன் உமன்ஸ் கேர் சார்பாக மரக்கன்றுகள் நடும் மற்றும் வழங்கும் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 May 2023

கடலூர் செம்மண்டலத்தில் எவர்கிரீன் உமன்ஸ் கேர் சார்பாக மரக்கன்றுகள் நடும் மற்றும் வழங்கும் விழா.


கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோடு செமண்டலம் நான்குமுனை சந்திப்பில் எவர்கிரீன் உமன்ஸ் கேர் சார்பாக மரக்கன்றுகள் நடும் மற்றும் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கடலூர் இன்னர் வீல் சங்கத்தின் முன்னாள்தலைவர் எவர் கிரீஸ் உமன்ஸ் கேர் உரிமையாளரும் வழக்கறிஞர் உமா புருஷோத்தமன் தலைமை தாங்கினார். 


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வருங்கால இன்னர் வீல் மாவட்ட தலைவி ஸ்ரீதேவி இந்திரகுமார் பொதுமக்களுக்கு மரங்கள் வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இன்னர் வீல் சங்கத்தின் நிர்வாகிகள் வருங்கால செயலாளர் சுபஸ்ரீ முன்னாள் தலைவர் சந்திரலேகா ,பல் மருத்துவமனை மருத்துவர் உமா தினேஷ், ஜெகன் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் லட்சுமி நாராயணன், மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்  அமர்நாத் மற்றும் காவல்துறை யினர்  கலந்து கொண்டனர். 


இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment

*/