நெய்வேலி அருகே அனுமதியின்றி ஆம் ஆத்மி கட்சியினர் கொடிக்கம்பம் வைத்ததால் வருவாய்த்துறையினர் அகற்றம் இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் சாலை மறியல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 May 2023

நெய்வேலி அருகே அனுமதியின்றி ஆம் ஆத்மி கட்சியினர் கொடிக்கம்பம் வைத்ததால் வருவாய்த்துறையினர் அகற்றம் இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் சாலை மறியல்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி கங்கைகொண்டான் பேருந்து நிலையம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் புதிதாக கொடி கம்பம் வைப்பதற்கு  வருவாய் துறையினரிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல்  கடந்த 3 நாட்கள் முன்பு கொடிக்கம்பம் வைத்துள்ளனர் இதனை அறிந்த வருவாய்த்துறையினர் நேற்று ஆம் ஆத்மி கட்சியினரிடம் அகற்றக்கோரி உள்ளனர்.


ஆம் ஆத்மி கட்சியினர் அகற்றவில்லை இதனால் வருவாய் துறையினர் ஆம் ஆத்மி கட்சி கொடி கம்பத்தை அகற்றினர் இதனை அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் ஏன் எங்கள் கொடி கம்பத்தை மட்டும் அகற்றினீர்கள் மற்ற கொடிக்கம்பங்களை அகற்றுங்கள் என்று கூறி நெய்வேலி கங்கைகொண்டான் பேருந்து நிலையம் அருகே கடலூர் விருத்தாசலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை அறிந்த மந்தாரகுப்பம்  போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்தனர்.


பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment