கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி பொதுத்துறை நிறுவனம் உள்ளது இந்த நிலையில் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் இருந்து டவுன்ஷிப் வரை சாலைப் பணிகள் என்எல்சி நிறுவனம் செய்து வருகின்றனர்.
இன்று மதுரையில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் நோக்கி அரசு பேருந்தும் நெய்வேலி டவுன்ஷிப்பில் இருந்து மந்தாரக்குப்பம் நோக்கி தனியார் பேருந்தும் வந்து கொண்டிருக்கும் பொழுது அப்போது சாலை பணிகளால் ஒரே சாலையில் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு நெய்வேலி என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், பின்னர் இதனை அறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தே.தனுஷ் செய்தியாளர் குறிஞ்சிப்பாடி
No comments:
Post a Comment