மேலும் கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். தொடர்ந்து ரெட்டிசாவடி, கடலூர் முதுநகர், கடலூர் புதுநகர் ஆகிய காவல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் 1997 பேட்ஜ் காவலர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று காவலர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார் காவல்துறை நிகழ்ச்சிகளை காவல்துறை புகைப்பட பிரிவில் பணியாற்றும் தலைமை காவலர் ஜெயக்குமார், முதல் நிலை காவலர் தங்கமணி ஆகியோர் சிறந்த முறையில் புகைப்படங்களை எடுத்து காவல்துறை இயக்குனர் அவர்களின் பாராட்டு பெற்றார்கள். மேலும் கடலூர் முதுநகர் காவல் நிலைய எழுத்தர் சுதாகர் காவல் நிலைய பதிவேடுகளை சிறந்த முறையில் பராமரித்து வருவதற்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இவர்களின் மெச்ச தகுந்த பணியினை பாராட்டி காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் வெகுமதி வழங்கியதை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பாராட்டுக்களை தெரிவித்தார்.
No comments:
Post a Comment