கடலூரில் மாநகரத் தமிழ்ச் சங்கசார்பாக பாரதிதாசன் பிறந்தநாள் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 May 2023

கடலூரில் மாநகரத் தமிழ்ச் சங்கசார்பாக பாரதிதாசன் பிறந்தநாள் விழா.


கடலூரில் மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாநடைபெற்றத. மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தங்க.சுதர்சனம் தலைமை தாங்கினார். பெ.நல்லதம்பி வரவேற்றார்.  அமைப்புச் செயலாளர்கள் கருணாகரன், பேராசிரியர் வனத்தையன், சாரல்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் தமிழியலன் பாரதிதாசன் திருஉருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்தார். சங்க சிறப்புத் தலைவர் வழக்கறிஞர் ஏ.எஸ். சந்திரசேகரன்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஓவியர் இராமேசு, ராதாகிருணடினன், செந்தில் முருகன் ஆகியோர் பாரதிதாசன் குறித்து கவிதை வாசித்தனர்.


புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் நா.இளங்கோ பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி இருப்பது மொழி உணர்ச்சியா சமுதாய சீர்திருத்தமா என்ற தலைப்பிலான பட்டிமன்ற நடுவராக இருந்தார். 


மொழி உணர்ச்சியே என நல்லதம்பி, ஆசிரியர் மகேந்திரன், சமூக சீர்திருத்தமே என மன நல ஆலோசகர் கோமதி, வக்கீல் அழகு.சாமிக்கண்ணு பேசினர். சங்க இணை செயலாளர் குமார் நன்றி கூறினார். விழாவில் கவிஞர் பால்கி,  தலைமை ஆசிரியர் குணசேகரன், வளவ.துரையன், ரவிச்சந்திரன், அரிகிருஷ்ணன், காசிநாதன், ஜெகரட்சகன், சுந்தர்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/