மே மாதம் முதல் நாள் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம் முன்னாள் இராணுவ வீரர்கள் பிரிவின் சார்பாக சி.தண்டேஷ்வரநல்லூர் பகுதியில் உள்ள ஓமக்குளம் பெட்ரோல் பங்கு அருகில் உள்ள தட்சிணா காம்ப்ளக்ஸ் அருகில் பாஜக கொடியேற்றினர்.
மேலும் கூடியிருந்த உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னாள் இராணுவ வீரர்கள் பிரிவின் மாநில துணை தலைவர் G.பாலசுப்ரமணியன் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்கள்.
இதற்க்கு ஏற்ப்பாடு செய்து தலைமை ஏற்று நடத்தியவர் பா.ஜ.க வின் அரசு தொடர்பு பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவரும், இன்னாள் நேதாஜி சுபாஷ் INA வின் முன்னாள் படைவீரர்கள் பிரிவின் மாநில தலைவர் தட்சிணாமூர்த்தி, இதில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து உரையாற்றியவர் பட்டியல் அணி மாநில துணை தலைவர் புவனை வெற்றிவேல், நிறைவாக மாவட்ட தலைவர் வக்கீல் G. உத்திராபதி நனறியுரையாற்றினார்.
No comments:
Post a Comment