கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி காவல் சரகத்திற்குட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழா கலை நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா அவர்கள் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
பின்னர் அவர் கஞ்சா, குட்கா போதை வஸ்துக்களினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தல், ஜாதிய மோதல்கள், FIR பதிவதினால் இளைஞர்களுக்கு எதிர் காலத்தில் ஏற்படும் விளைவு,இளைஞர்களின் ஒழுக்கம் புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல், இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் போன்றவற்றினால் இளைஞர்களுக்கு வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
கோவிலுக்கு திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் மத்தியில் காவல் உதவி ஆய்வாளர் ஏற்படுத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment