காளிஸ்வரி பவுண்டேஷன் சார்பில் பள்ளிக்கு இலவச டெஸ்க், பெஞ்சு மற்றும் கற்றல் வழங்கல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 May 2023

காளிஸ்வரி பவுண்டேஷன் சார்பில் பள்ளிக்கு இலவச டெஸ்க், பெஞ்சு மற்றும் கற்றல் வழங்கல்


விருத்தாசலம் கஸ்பாவில் உள்ள டேனிஷ் மிஷன் நடுநிலை பள்ளிக்கு காளிஸ்வரி பவுண்டேஷன் சார்பில் இலவசமாக டெஸ்க், பெஞ்சு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. 


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கஸ்பாவில் அமைந்துள்ள 94ஆண்டிகள் பழைமை வாய்ந்த டேனிஷ் மிஷன் நடுநிலை பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி காளிஸ்வரி பவுண்டேஷன், அறம் பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் பிரசன்னா தானாக முன்வந்து பள்ளிக்கு டெஸ்க், பெஞ்சு, மற்றும் கற்றல் உபகரணங்கள் THE TOYS BANK நிறுவனம் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய விளையாட்டு உபகரணங்களை இலவசமாக வழங்கினார். 


பின்னர் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான முதலாம் வகுப்பில் சேர்க்கையின் போதே மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக மாலை அணிவித்து மரியாதை செய்து அவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில பள்ளியின் தலைமை ஆசிரியர் கிடியன் எபினேசர் வரவேற்றார். பள்ளி தாளாளர் மறைதிரு. தியாப்லஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் இமையம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



மேலும் இரவீந்தரநாதன் பெரியம்மா அறக்கட்டளை விருத்தாச்சலம் மண்டல கல்வி அலுவலர்கள் தேவராஜன், மில்கா ஜெயகுமாரி, தலைமை ஆசிரியர் டேவிட் லாசர், நகர்மன்ற உறுப்பினர் தீபா மாரிமுத்து, தமிழ்ஆசிரியர் தமிழ்செல்வன், முதுகலை ஆசிரியர் கனகராஜ் ஆசிரியர் சினேகன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் பெற்றோர், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளனூர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/