கடலூர் மாவட்டம் புவனகிரி அதிமுக ஒன்றியப் பெருந்தலைவர் சி.என். சிவப்பிரகாசம் தலைமையில் கழகத்தின் காவல் தெய்வம் ,பொதுச் செயலாளர், வருங்கால தமிழகமுன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் நடைபெற்றது. முன்னதாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் அருகிலுள்ள வாதாபி கணேசர் கோவிலில்விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு நடைபெற்று தமிழகத்தின் நிரந்தர முதல்வராகவேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் ஏழை எளியோருக்கு ஒன்றியப் பெருந்தலைவர் அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்கழக துணைச் செயலாளர் பிரிதிவி,அதிமுக வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், புவனகிரி மேற்கு ஒன்றியப்பொருளாளர் அம்பாள்புரம் சங்கர் , ஊராட்சிகழகச் செயலாளர் ஜெயசீலன், சாமிநாதன் பிரகாஷ், சத்குரு, இந்திரா, சக்திவேல், நேரு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment