கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அதிமுக நகர கழகம் சார்பில் அதிமுக கழக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின்பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நகரச் செயலாளர் எஸ்.ஆர்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு விநாயகர் கோவிலில் எடப்பாடியார் நீண்ட ஆயுளோடும், வருங்கால தமிழக முதல்வராக வர வேண்டியும் பால், பன்னீர், தேன், பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று மகாதீபாரதனை காட்டப்பட்டது.
பின்னர் வெடி வெடித்துசர்க்கரைப் பொங்கல், மற்றும்இனிப்புகள் ஆகியவை பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் அவைத் தலைவர் கோழி கோவிந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் தெய்வ.ராஜகுரு, பாலசுந்தரம், சங்கர் வார்டு செயலாளர்கள் டெய்லர் குணசேகரன்,, டிவிஎஸ்.ராமமூர்த்தி, லலிதா,அஞ்சாபுலி, திலீப், கோபால், ரவி, சித்ரா, மகேந்திரன், அண்ணா பிரபாகரன், கமலக்கண்ணன், கனகரத்தினம், மணிமாறன், சுரேஷ், வீரமணி, ஹக்கீம் மற்றும்கட்சியின் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment