இலவசம் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பிய மருத்துவருக்கு குவியும் பாராட்டுக்கள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 May 2023

இலவசம் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பிய மருத்துவருக்கு குவியும் பாராட்டுக்கள்


மனிதநேயத்தோடு தாமாக மூன் வந்து மருத்துவ உதவி செய்து இலவசம் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பிய மருத்துவருக்கு குவியும் பாராட்டுக்கள்




கடலூர் மாவட்டம் புவனகிரியில் இயங்கி வரும் ஆர்.வி.பி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஆர்.வி. பி .கதிரவன் அவர்கள் இம் மருத்துவமனை தொடங்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து வறுமையிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய பொது மக்களுக்கு கிராமங்களுக்கே சென்று இலவச மருத்துவ முகாம் நடத்துவது ஆதரவின்றி தவித்து வரும் முதியோர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட பின்  இலவச  ஆம்புலன்ஸ் மூலம் அவர்களுடைய கிராமப் பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவசமாக  மருத்துவ உதவி செய்து மீண்டும் அவர்களுடைய இல்லங்களுக்கு நிரும்ப அனுப்பி வைக்கிறார் டாக்டர் ஆர். பி.வி.கதிரவன் 


இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பு.கொளக்குடி கிராமத்தில்   வசித்து வரும் கூலி தொழிலாளியான ராஜேஸ்வரி கணவர் பெயர் மணி வயது 60 என்பவர் ஆதரவற்ற நிலையில் கணவன் மனைவி இருவர் தனியே வசித்து வருகின்றனர் திடீரென்று ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் மணி ஆகிய இருவருக்கும் திடீர் காய்ச்சல் ஏற்பட்டது இரவு நேரம் என்பதால் அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் போதிய வாகன வசதியின்றி தவித்து வந்த நிலையில் சம்பவம் குறித்து அப்பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலர் எஸ்,கார்த்தி என்பவர் மூலம் மருத்துவர் கதிரவன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

 பின்னர் இரவு நேரம் என்றும் கருதாமல் உடனடியாக தனது மருத்துவமனையின் ஆம்புலன்ஸை அப்பகுதிக்கு அனுப்பி ஆதரவற்ற இரு முதியவர்களையும்  மருத்துவமனைக்கு அழைத்து வந்து உடனடியாக சிகிச்சை அளித்தார் பின்னர் 

  மறுநாள் இரண்டு பேரையும் சுமார் மதியம் 2.00 அளவில் மருத்துவமனையின் இலவச ஆம்புலன்ஸ் மூலம்   வீட்டுக்கு அனுப்பி வைத்தார்


ஆதரவின்றி தவித்து வந்த  முதியவர்களுக்கு இலவசமாக  மருத்துவ உதவி செய்து தனது மருத்துவமனை ஆம்புலன்ஸில் வீட்டுக்கு அனுப்பிய மருத்துவருக்கு அப்பகுதி மக்களின் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

No comments:

Post a Comment

*/