ஒரத்தூர் கருப்பசாமி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 May 2023

ஒரத்தூர் கருப்பசாமி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா


ஒரத்தூர் கருப்பசாமி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா 



சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூரில் கருப்பசாமி வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தில் கருப்பசாமி வித்யாலயா மெட்ரிக்பள்ளி இயங்கிவருகின்றது. நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். பள்ளியில் நேற்று நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு பள்ளியின் தாளாளரும் ஏ.வி.கே.எஸ்.பவுண்டேஷன் நிர்வாகியுமான ஆறுமுக சுவாமி தலைமை தாங்கினார்.


சிறப்பு விருந்தினர்களாக சேத்தியாத்தோப்பு நகர அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகி பக்கிரிசாமி, மற்றும் காஞ்சிபுரம் காமாட்சி கேஸ் ஏஜன்சி நிர்வாகி ராணிஸ்ரீகாந்த், அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்து கூறினர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் இரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். பள்ளி ஆண்டு விழாவில் மாணவ, மாணவியர்களின் கோளாட்டம், மற்றும் ஆடல் , தேசபக்திபாடல் ,கலைநிகழ்ச்சி, மாறுவேடம், பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களையும் பக்கிரிசாமி வழங்கினார்.


நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் முதல்வர் கோப்பெருந்தேவி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை அனைத்து ஆசிரியைகளும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

*/