சிதம்பரம் அம்மாபேட்டை பாலம் எப்போது திறக்கப்படும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி ஓராண்டுக்கு மேல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சிதம்பரம் புறவழிச் சாலை வழியாக நாகப்பட்டினம் தஞ்சாவூர் மயிலாடுதுறை கும்பகோணம் சீர்காழி வழிதடத்தில் செல்லும் பேருந்து மற்றும் வாகன ஓட்டிகள் புறழி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
புறவழிச் சாலையில் சாலை அமைக்கும் பணி பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் நடக்கின்றது தற்போது ஓம குளம் பேருந்து நிறுத்தம் அருகே சிறிய பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது இதனால் காட்டுமன்னார்கோயில் ஜெயங்கொண்டம் வழித்தட பேருந்துகள் மற்றும் அனைத்து பேருந்துகளுமே புறவழிச் சாலை வழியாக கன்னங்குடி பைபாஸ் பைசல் மஹால் வழியாக வந்து பேருந்துகள் கஞ்சி தொட்டி வடக்கு வீதி வழியாக பேருந்து நிலையத்தை அடைகின்றனர்.
இதனால் பேருந்துகள் சுற்றிவரும் நிலை ஏற்பட்டு உள்ளது விரைந்து பாலம் கட்டும் பணிகளை முடிக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?.
No comments:
Post a Comment