கடலூர் மாவட்டம், வடலூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நரிக்குறவர் காலனி உள்ளது இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் இந்நிலையில் நீண்ட காலமாக தங்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது இதனால் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் அரசின் நலத் திட்டங்களையும் கல்லூரியில் சேர்வதற்கு அரசு ஒதுக்கீடு பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.
அன்மையில் தமிழக அரசு நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார இன மக்களுக்கு சாதி சான்று வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது இதன் அடிப்படையில் வருவாய் துறை மூலம் அவர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு பட்டிய இன வகுப்பிற்க்கான சாதி சான்று வழங்குவதற்கு முகாம் மூலம் மனுக்கள் பெறப்பட்டது.
வடலூர் நரிக்குறவர் காலனியில் நடைபெற்ற முகாமில் முதற்கட்டமாக கட்டமாக வடலூர் நரிக்குறவர் காலனியில் உள்ள 155 நபர்களுக்கு குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சுரேஷ் குமார் அவர்கள் தலைமையில் சிறப்பு முகாம் மூலம் ஜாதி சான்று வழங்க மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர் துரை ராஜன், வருவாய் ஆய்வாளர் சோபனா , 27வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் அர்ஜுனன் நரிக்குறவர் நல சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெய்சங்கர் கடலூர் மாவட்ட தலைவர் எ.கே.பாபு, பாண்டியன், மாசிலாமணி, ஆனந்த், ரஜினி,ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment