கடலூர் இம்ப்ரியல் சாலையில் உள்ள பிரபல இனிப்பகம் எதிரில் சாலையில் திடீரென பள்ளமும் மோகினி பாலம் அருகே இருபுறமும் பாதாளசாக்கடை சாலையின் நடுவே செல்வதால இருபுறமும் உள்ள மேன்ஹால் உடைந்து பள்ளக்குழியாக உள்ளது காலை மாலை நேரத்தில் சாக்கடை நீர் வழிந்து துர்நாற்றம் வீசுகிறது மேலும் இரவு நேரங்களில் வாகனங்கள் இப்பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்ப்படுகிறது.
மேலும் சாலைக்கரையில் உள்ள மேன்ஹால்கள் சாலையில் இருந்து அரை அடிக்கும் மேல் உள்ளது இது குறித்து கடலூர் மாநகர 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் கண்ணன் கடந்த மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் பெரிய விபத்துகள் நடப்பதை தவிர்க்க இச்சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
No comments:
Post a Comment