கடலூரில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பில் கல்வி கருத்தரங்கம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 May 2023

கடலூரில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பில் கல்வி கருத்தரங்கம்.


கடலூரில் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பில் கல்வி கருத்தரங்கம் கடலூர் நகர அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கல்வி கருத்தரங்கிற்கு சங்கத்தின் தலைவர் ஆர் .ஜானகிராமன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் லாகவா குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் காசநோய் இணை இயக்குனர் டாக்டர் எஸ். கருணாகரன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். 


இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் எஸ் .சம்பத்குமார் மற்றும் தனவந்தன் கடலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் கதிரவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தேசியத் தலைவர் பி. காளிதாசன், தமிழக தலைவர் எல். துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் இந்த நிகழ்ச்சியில் செயலாளர் கருணாகரன், பொருளாளர் ஜெயராமன் ,ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், துணைத் தலைவர் சிவராமன், ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


மருந்து கடைகளில் ரத்த பரிசோதனை செய்வதை தடை செய்ய வேண்டும். மருத்துவ கழிவுகள் அகற்றும் நிறுவனங்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் தமிழக அரசு மருத்துவக் கழிவுகளை அகற்ற மருத்துவ கட்டணமாக ரூபாய் 500 உயர்வு உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கருத்தரங்கில் 600க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/