கடலூர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் சார்பில் பண்டிதர் அயோத்தி தாசரின் 178-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது, அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் மாவட்ட செய்தி தொடர்பாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார், அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் கடலூர் வட்டத் தலைவர் அண்ணாதுரை அனைவரையும் வரவேற்றார்,பள்ளி மாணவர்களுக்கு அயோத்திதாசரின் வாழ்க்கை வரலாறு குறித்த சிறு வினா போட்டி நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கருணாமூர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டினார், சிறப்பு அழைப்பாளர்களாக அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் முதன்மைச் செயலாளர் திரு. ச. பாவாணன், நெறியாளர் கோவிந்தசாமி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பிரச்சார செயலாளரும், தமிழ்நாடு அரசு நுண்கதிர் தொழில்நுட்ப பணியாளர் சங்கத்தின் மாநில தலைவருமான ந. சுந்தர்ராஜா கலந்து கொண்டார்கள், நிகழ்வில் மகேந்திரன், தமிழரசன், திவாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள், இறுதியில் அரசு ஊழியர் தொழிலாளர் விடுதலை முன்னணியின் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment