சேத்தியாத்தோப்பு அருகே மழைத்தூறலோடு சூறைக்காற்று. மரங்கள்முறிந்துவிழுந்த வீடுகள் சேதம். மின்சாரம் துண்டிப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 May 2023

சேத்தியாத்தோப்பு அருகே மழைத்தூறலோடு சூறைக்காற்று. மரங்கள்முறிந்துவிழுந்த வீடுகள் சேதம். மின்சாரம் துண்டிப்பு


சேத்தியாத்தோப்பு அருகே மழைத்தூறலோடு  சூறைக்காற்று. மரங்கள்முறிந்துவிழுந்த வீடுகள் சேதம். மின்சாரம் துண்டிப்பு
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி, அம்மன்குப்பம், கீழ்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் லேசான மழை தூறலோடு சில நிமிடங்கள்  சூறைக்காற்று வீசியது. அப்போது தென்னை, மா, நூறாண்டு வயது  மதிக்கத்தக்க புளியமரம், முருங்கை, வாழை மரங்கள் என மரங்கள்


காற்றில் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. இதில் 


 வீடுகளின் மீது மரங்கள் விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் குடியிருப்புப்பகுதியில் இருந்த மின்கம்பங்கள் முறிந்து, மின் கம்பிகளும் அறுந்து விழுந்துள்ளன. முக்கியமாக தகரத்தால் போடப்பட்ட


வீட்டின் கூரைகள் சூறைக்காற்றில் பெயர்த்தெடுத்து  நடவு வயலில் சென்று விழுந்துள்ளன. தற்போதைய நிலையில் இப்பகுதி குடியிருப்பு வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதென்றே கூறலாம். மேலும் வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வயதான பெண்மணி ஒருவர்  மீது மரத்தின் கிளை ஒன்று பெயர்ந்து விழுந்ததால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கிராமத்தினர்  கூறுகின்றனர். 

No comments:

Post a Comment