கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டைவில் சிறு குறு விவசாயிகள் சங்கம் சார்பில் வீராணம் ஏரியிலிருந்து பாசனம்பெறும் வாய்க்கால்களான வீராணம் ஏரி கிளை வாய்க்கால், திருச்சின்னபுரம், லால்பேட்டை, சர்வராஜான்பேட்டை பாசன வாய்க்கால்களை தூர் வாரக்கோரி மண்சோறு சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது.
மேற்கானும் பாசன வாய்க்கால்கள் தூர்வார முடியாமல் போளதால் பாசனத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், பாசனத்திற்காக வரும் தண்ணீரானது விரயமாகியும் வருகிறது.
இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், என பலருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லாமல்போனதால் வேதனையடைந்த ஏராளமான விவசாயிகள் சிறுகுறு விவசாய சங்கத் தலைவர் இதயத்துல்லா தலைமையில்சுமார் 50ககும் மேற்பட்டோர் கலந்து கொண்டுஅரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
அப்போது பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும்.மேலும் பாசன வாய்க்கால்களின் எகரைகளின் மேல் உள்ள சாலை வழித்தடமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அதனையும் மீட்டெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கள் போராட்டத்தை மதித்து வாய்க்கால்களை தூர் வாரவில்லை என்றால், பொதுப்பணித்துறை நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும் போதிய நிதியில்லை என முடிவு செய்து நாங்களே அடுத்த கட்டமாக பொதுமக்களிடம் பிச்சை எடுத்து அதில் வரும் நிதியை வைத்து பாசன வாய்க்கால்களை தூர் வருவோம் எனவும் தெரிவித்தனர்.
விவசாயிகள் மண் சோறு சாப்பிட்ட சம்பவமும், பாசன வாய்க்கால் தூர்வாராமல்போனால் பிச்சை எடுத்துதூர் வாருவோம் என விவசாயிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
No comments:
Post a Comment