கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி உள்ளது.இப்பள்ளிக்கு பின்புறமாக திடீரென ராட்சச முதலைப் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்புறம் புகுந்த முதலையானது நீண்ட நேரமாக அசைவற்று கிடந்தது. வயல்வெளிக்கு கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் முதலை பள்ளிக்குப் பின்புறம் தோட்டத்தில் கிடப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.பின்பு வந்த வனத்துறையினர் 7 அடி நீளமும் சுமார் 100 கிலோ எடையும் கொண்ட ராட்சச முதலையைப் பிடித்துச் சென்றனர். அருகில் பாசன வாய்க்கால் மற்றும் வெள்ளாறும் இருப்பதால் இரையைத்தேடி ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் எப்போதும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் நடமாட்டம் இருந்து வரும் நிலையில் தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் பெரும் ஆபத்திலிருந்து மாணவர்கள் தப்பித்தனர் என்று கிராமத்தினர் கூறுகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அருகே அரசு பள்ளிக்கு பின்புறம் புகுந்த முதலை பள்ளி விடுமுறை என்பதால் ஆபத்திலிருந்து தப்பிய மாணவர்கள்
No comments:
Post a Comment