மீண்டும் அ தி மு க வின் கோட்டையாக கடலூர் வரவேண்டும் முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 May 2023

மீண்டும் அ தி மு க வின் கோட்டையாக கடலூர் வரவேண்டும் முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத்


மீண்டும் அ தி மு க  வின் கோட்டையாக கடலூர் வரவேண்டும் முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் 


கடலூர் புதுப்பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.ஸஇதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான எம்சி.சம்பத் கலந்து கொண்டு வார்டுகளில் பெறப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை பெற்றுக்கொண்டார்.



பின்னர்  பேசிய முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்  கவுன்சிலர் முதல் எம்.பி தேர்தல் வரை  வெற்றி பெற உறுப்பினர்கள் தேவை,உறுப்பினர்களை அதிக அளவில் இணைத்து அதிமுக வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும்,அதற்காக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

மேலும் கடலூர் அதிமுகவின் கோட்டை, வருகின்ற தேர்தலில் அதிமுகவின் கோட்டையாக கடலூர் மீண்டும் மாற வேண்டும்  என எம்.சி சம்பத் கேட்டுக்கொண்டார். மாவட்ட அமைத்தலைவர் சேவல் ஜி ஜெ குமார் ஆர்.வி ஆறுமுகம் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே காசிநாதன் புதுப்பாளையம் பகுதி செயலாளர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் தமிழ்ச்செல்வன், மணிமாறன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் பஞ்சாயுதபாணி, ஜி ஆர் ராஜேந்திரன் மற்றும்  அழகப்பன் ,அருண் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/