நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை பற்றி எடுத்துரைக்கப்பட்டது, மேலும் அமைச்சர் அவர்கள் பேசுகையில் திமுக ஆட்சியில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மூலம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது காலை உணவு திட்டம் ,பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஆகிய திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார் பின்னர் திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அதிக அளவில் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தார் நிகழ்ச்சியின் இறுதியில் உடல் நலகுறைவு காரணமாக அண்மையில் மரணமடைந்த நெய்வேலி தினத்தந்தி செய்தியாளர் ரமேஷ் அவரது குடும்பத்திற்கு ரூபாய் 35 ஆயிரத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.
No comments:
Post a Comment