கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த நடுவீரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை வழங்கி தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார் பின்னர் நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் வேளாண்துறை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியத்தில் டிராக்டர் மற்றும் சமூகநலத் துறையின் மூலம் இலவச தையல் மெஷின், சலவை பெட்டி போன்றவை வழங்கப்பட்டது மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.
பின்னர் வருவாய்த் துறையின் மூலம் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் பேசுகையில் தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இதில் கடலூர் மாவட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மாதம்தோறும் மனுநீதி நாள் முகாம் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகின்றது இம்முகாமில் பொதுமக்கள் தங்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து மனு மூலம் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த அந்த மனுவின் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் மேலும் மகளிர் என்று பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது எனவும் மகளிர்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment