சென்னைக்கு குடிநீர் கொடுக்கும் வீராணம் ஏரியை தூய்மையாக பராமரிக்கக் கோரும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 May 2023

சென்னைக்கு குடிநீர் கொடுக்கும் வீராணம் ஏரியை தூய்மையாக பராமரிக்கக் கோரும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்.


சென்னைக்கு  குடிநீர் கொடுக்கும் வீராணம் ஏரியை தூய்மையாக பராமரிக்கக் கோரும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியிலிருந்து சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க குடிநீருக்காக தினமும்ஏரிநீர் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் ஏரியின் தண்ணீர் செல்லும் பகுதியான பூதங்குடி 


விஎன்எஸ் மதகு அருகில் ஏரி தண்ணீரில் பல்வகைகுப்பைகள், பிளாஸ்டி பாட்டில்கள், கப்புகள் அடர்த்தியாக  மிதக்கின்றன. இவற்றை அகற்ற இப்பகுதிகிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  தற்போது சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் மெட்ரோ நிர்வாகம் தண்ணீரில் மிதக்கும் குப்பைகள், கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில் போன்றவை தங்களின் ராட்சச தண்ணீர் செல்லும் குழாய்களில் அடைத்து விடப் போகிறதோ என்று ஏரியிலேயே வேலிகள் இட்டு சென்னைக்கு தண்ணீர் செல்லும் முகப்புப்பகுதியில்  பல்வேறு குப்பைகள் செல்லாமல் தடுத்து வைத்துள்ளனர்.  தடுத்து வைத்துள்ள இந்த குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி ஏரியை பராமரிப்புப்பணிகள் செய்து பொதுமக்கள் மற்றும் மெட்ரோ நிர்வாகத்திற்கு தரமான, சுத்தமான, சுகாதாரமான ஏரித் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment