கடந்த 25. 5. 1988 தேதி காவலராக பணியில் சேர்ந்த காவலர்கள் செயின்ட் தாமஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து 35 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 25.5. 2023 ம் தேதி 36 வது ஆண்டு காவல்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இந்நன்னாளில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கடலூர் மாவட்டம் மவுண்ட் பேட்ச் காவல்துறை நண்பர்கள் அனைவரும் இணைந்து மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் உள்ள குருபகவான் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
பணியில் தொடர்ந்து சிறப்புடன் பணியாற்றவும் உடல் ஆரோக்கியம் வேண்டிய குடும்பத்தார் நலம் வேண்டியும் சிறப்பு இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். இதே போன்று விழுப்புரத்தில் உள்ள நண்பர்கள் விழுப்புரம் கைலாசநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment