கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம்(45) என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்து வருகின்றனர்.
அப்போது டாஸ்மாக் கடைக்குச் சென்றவர் மின்சாரம் தாக்கி விழுந்துள்ளார் என்று தகவல் பரவியதைடுத்து தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் விழுந்து கிடந்த ராஜாராமினை பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்திருப்பதாக தெரிந்தது. உடனடியாக அவர் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் எப்படி நடந்தது என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்துஇறந்தவரது குடும்பத்தார் மற்றும் கீழமணக்குடி கிராமத்தினர்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
டாஸ்மாக் கடைக்காரர்கள் மின்சாரம் தாக்கப்பட்டதைப் பற்றி உடனடியாக விபரம் தெரிவிக்கவில்லை என்று புகார் கூறி விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.
No comments:
Post a Comment