கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தாமரைக் குளம் தெருவைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் பசுமாடு மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய பொழுது ஸ்ரீமுஷ்ணம் இந்தியன் வங்கி எதிர்புறத்தில் உள்ள ஒரு மளிகைக் கடை மற்றும்ஃ போட்டோ ஸ்டுடியோவுக்கு இடைப்பட்ட சந்தில்இந்தபசு மாடு வந்து கொண்டிருந்தபோது இரண்டு கடைகளுக்கும் இடையே உள்ள சந்தில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தது. சில மணிநேரம் பசுமாடு தவித்த நிலையில் கடை உரிமையாளர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தெரிவித்தனர்.உடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மாடு சிக்கிக்கொண்ட சந்தில் இருந்த தகரம் மற்றும் ஷட்டரை அகற்றிவிட்டு மாட்டை பத்திரமாக மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் கடைச்சந்தில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து அந்தப் பசு பரிதாபமாககத்தியது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்தது..
ஸ்ரீமுஷ்ணத்தில் கடை சந்தில் சிக்கிக்கொண்ட பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டனர்
No comments:
Post a Comment