வடலூர் அருகே பாஞ்சாலிதேவியார் கூந்தல் முடிதலும், தீமிதி திருவிழா நடைபெற்றது, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, சாமி தரிசனம்
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கருங்குழி அருள்மிகு தருமராஜா துரோபதையம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏப்ரல் 17ஆம் தேதி (சித்திரை 4ந்தேதி திங்கள் )மாலை கோட்டகம் கிராமத்தில் உள்ள, அய்யனார் கோவிலிருந்து கோட்டகம், வீணங்கேணி, வடக்குமேலூர் ஆகிய கிராமத்தை சேர்ந்தகுலதெய்வ வழிபாட்டு வகையறாவினர் ஏற்பாட்டில் தீர்த்தம் கொண்டுவந்து,காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன்தீமிதி திருவிழா தொடங்கியது,
விழாவையொட்டி தினசரி மாலையில் சின்ன எலந்தம்பட்டு,கலியமூர்த்தி பாரதியாரின் மகாபாரத உபன்யாசத்துடன் விழா தொடங்கி, இருபது நாள் நடைபெற்றது,இதில் பதினோராம் நாள் தருமராஜா பட்டாபிஷேகமும், 12 நாள் பாஞ்சாலி தேவியார் திருக்கல்யாணமும் நடைபெற்றது,பதினைந்தாம் நாள், பதினாறாம் நாள், 17வது நாள், 18வது நாள்,19வது நாள், ஆகிய நாட்களில் உபன்யாசத்தை தொடர்ந்து அபஷேக ஆராதானையும் நடைபெற்றது,
நேற்று 18ம் நாள் இரவு சிறப்பு அபஷேக ஆராதனையும், அலங்கார பூங் கரகத்துடன், அம்மன் வீதியுலாவும் நடைபெற்று,
தீமிதி திருவிழா,நேற்று, மே 5ந்தேதி, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அரவான்களபலியும், மாலை 3 மணிக்கு பாஞ்சாலி தேவியார்கூந்தல் முடிதலும், மாலை 5 மணிக்கு தீமிதி விழாவும் நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்து திக் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினார்கள், தொடர்ந்து இரவு 10 மணிக்கு அபஷேக ஆராதனையும் நடைபெற்றது, தீமிதி திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர், தொடர்ந்து, தருமர் பட்டாபிஷேகம்:நாளை மறுநாள் (ஞாயிறு) காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், பாஞ்சாலி தேவி வீதியுலாவும், இரவு 8 மணிக்கு தருமர் பட்டா அபஷேகமும் நடைபெறுகிறது, நிகழ்ச்சி ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டு, மற்றும் விழாகுழுவினர்கள், செய்து இருந்தனர்,'
Post Top Ad
Saturday 6 May 2023
வடலூர் அருகே துரோபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா
Tags
# குறிஞ்சிப்பாடி
About தமிழக குரல்
குறிஞ்சிப்பாடி
Tags
குறிஞ்சிப்பாடி
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment