கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணா கிராம ஒன்றியம் கண்டரக்கோட்டை ஊராட்சியில் மாவட்ட பிரதிநிதி சிவகுமார் தலைமையில் மதிமுக கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி மதிமுகவினர் கொண்டாடினர் இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் டாக்டர். எஸ் .கே .வெங்கடேசன் கலந்துகொண்டு மதிமுக கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் அப்போது டாக்டர். எஸ் .கே .வெங்கடேசன் மே 6 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உதித்த நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தலைமை கழக செயலாளர் துரை வைகோ அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் நகர ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் மதிமுக கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணா கிராமம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் மதிமுக கழக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருவதாக அவர் தெரிவித்தார் . இந்த நிகழ்வில் மாவட்ட பிரதிநிதிகள் சுந்தராஜன் , பிரகாஷ் , ஒன்றிய துணை செயலாளர் ராஜவேலு, பத்மநாபன் , அன்பு , கண்டரக்கோட்டை கிளை கழக செயலாளர் குமார் உள்ளிட்ட ஏராளமான மதிமுகவினர் கலந்து கொண்டனர்.
மதிமுக 30 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி பண்ருட்டி பகுதியில் மதிமுகவினர் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்..
No comments:
Post a Comment