அள்ளூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பஞ்சபூதத்தை சமன்படுத்தும் திறந்தவெளி கூட்டு வழிபாடு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 May 2023

அள்ளூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பஞ்சபூதத்தை சமன்படுத்தும் திறந்தவெளி கூட்டு வழிபாடு


அள்ளூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பஞ்சபூதத்தை சமன்படுத்தும் திறந்தவெளி கூட்டு வழிபாடு நடந்தது.




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க அள்ளூர் வழிபாட்டு மன்றம் சார்பில் உலகெங்கிலும் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலை தடுக்கவும், எங்கும் மழை பொழிந்து சுபிட்சம் நிலவிடவும், மனிதர் முதல் விலங்கு பறவை எனஅனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழவும், கோடை வெயில் உயிர்களை கசக்கி பிழியும் கடுமையான வெப்பசூழ்நிலை தாக்கத்திலிருந்து உயிரினங்களை காப்பாற்றும் பொருட்டுபஞ்சபூத சமன்பாட்டை சரி செய்யும் விதத்தில் நடக்கும் இந்த வழிபாடு உலகெங்கிலும்  170 நாடுகளில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திலும் ஒரே நேரத்தில் திறந்தவெளி சிறப்பு வழிபாடாக நடைபெறுகிறது. அதன்படி 21/05/2023 ஞாயிறு (CD31)அள்ளூரில் நடைபெற்ற வழிபாட்டில் புவனகிரி வட்டத் தலைவர் சஞ்சீவி ராயர் தலைமையேற்க, முன்னாள் மாவட்ட செயலர் C.உத்திராபதி முன்னிலையில், மன்றத்தலைவர் பொன்மொழி தொடங்கி வைக்க, கோமகள் தேவி, மனோகரி, கவிதா, செல்வராசு, விமல், சீதாபதி, ஆண்டாள், தமிழ்ச்செல்வி, முத்தமிழ்செல்வி,பிரபா, மாலா, தேவி, லதா, தமிழரசி, சாந்தி, சக்தி நந்தினி, உஷா, ஆர்த்தி, மதிவாணன், பழனியம்மாள் ஆகியோர் கலந்து கொள்ள சக்தி மகேந்திரன், கனகரத்தினம், பரிமளக் கண்ணன் ஆகியோர் வழிபாட்டு ஏற்பாட்டினை செய்தார்கள்.மற்றும் மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/