ஊர்க்காவல் படை வீரர்கள் பணித்திறன் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 May 2023

ஊர்க்காவல் படை வீரர்கள் பணித்திறன் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு.


தமிழ்நாடு ஊர்க்காவல் படை 28 வது பணித்திறன் மற்றும் விளையாட்டு போட்டி 19, 20, 21. மூன்று நாட்களாக திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. விழுப்புரம் சரகம் ஊர்க்காவல் படை சார்பாக கைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று, நீளம் தாண்டுதல் போட்டியில் ஊர்க்காவல் படை வீரர் தினகரன் முதலிடம், கூட்டு கவாத்து போட்டியில் முதலிடம், முதலுதவி போட்டியில் முதலிடம், அலங்கார அணி வகுப்பில் முதலிடம், கயிர் இழுத்தல் போட்டியில் (மகளிர்) இரண்டாம் இடத்தையும் பெற்று விழுப்புரம் சரகம் ஊர்காவல்படைக்கு பெருமை சேர்த்தனர். 


விளையாட்டு போட்டிகளில் பங்குகேற்று கோப்பையை வென்ற ஊர்க்காவல் படையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  இரா. இராஜாராம்  பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக உதவி தளபதி . கேதார்நாதன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி  அம்ஜத்கான், துணை வட்டார தளபதி திருமதி கலாவதி, கோட்ட தளபதி  சிவப்பிரகாசம், உதவி படை தளபதிகள் கணபதி,  வேதரத்தினம்,  மதியழகன்,   சுதர்சனம், திருமதி. வள்ளிமை, எழுத்தர் ராமானுஜம் ஆகியோர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment