நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் டாக்டர். அருண் தம்புராஜ் மற்றும் மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 May 2023

நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் டாக்டர். அருண் தம்புராஜ் மற்றும் மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


கடலூர் மாநகராட்சி சார்பில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண் தம்புராஜ் மற்றும் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


தமிழகம் முழுவதும் குடிநீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் கடலூர் மாநகராட்சியில் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி கடலூர் ஜவான் பவான் சாலையில் இருந்து புறப்பட்டது. பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.அருண் தம்புராஜ் மற்றும் மேயர் திருமதி. சுந்தரி ராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏராளமான  பெண்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக வழியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த விழிப்புணர்வு பேரணியில் கூடுதல் ஆட்சியர் மதுபாலன், துணை மேயர் தாமரைச்செல்வன் கடலூர் மாநகர தி மு க செயலாளர் கே எஸ் ராஜா ஆணையர் கிருஷ்ணமூர்த்தி துப்புரவ பணிகள் ஆய்வாளர் ஜவஹர்  மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

*/