சேத்தியாத்தோப்பு அருகே கோவில் நிலகுத்தகை விவகாரத்தில் பழையகுத்தகைதாரர்களுக்கே வழங்க விவசாயிகள் கோரிக்கைமனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 May 2023

சேத்தியாத்தோப்பு அருகே கோவில் நிலகுத்தகை விவகாரத்தில் பழையகுத்தகைதாரர்களுக்கே வழங்க விவசாயிகள் கோரிக்கைமனு


சேத்தியாத்தோப்பு அருகே கோவில் நிலகுத்தகை விவகாரத்தில் பழையகுத்தகைதாரர்களுக்கே வழங்க விவசாயிகள் கோரிக்கைமனுகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே டி.நெடுஞ்சேரி மடப்புரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில் நிலங்களை 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய விவசாயிகள் பலர் குத்தகைக்குப் பயிர் வைத்து


அந்த குத்தகைக்குண்டான பணத்தை ஆண்டுதோறும் முறையாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் 


செலுத்தியும் வருவதாகக்கூறுகின்றனர். இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்  புதிதாக அந்த நிலங்களை ஏலம் விட வேண்டும் என அறிவிப்பு செய்து ஆட்டோ விளம்பரமும் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நடப்பு குத்தகைதாரர்கள்  இதனைக் கண்டித்து ஏற்கனவே புவனகிரியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று டி. நெடுஞ்சேரி கோவில் பகுதியில் குத்தகை நிலங்களை புதிய ஏலம் விடுவதற்காக அதிகாரிகள் வருவதை அறிந்து விவசாயிகள், விவசாய சங்கத்தினர் அதிகாரிகள் வருவதற்கு முன்பே ஏலம் நடைபெறவுள்ள கோவில் பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.இதனால் இக்கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதனையறிந்த அதிகாரிகள் ஏலம் நடக்கும் பகுதிக்கு வராமல் ஏலம் விடுவதை தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக கடிதம் கொடுத்து அனுப்பி விவசாயிகளை கலைந்து போக வைத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் அதிகாரிகள் ஏலம் விடுவதை தற்காலிகமாக தள்ளி வைத்ததைப்போல தங்களின்  போராட்டமும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாகவும்  தெரிவித்துள்ளனர்.


காலகாலமாக ஏழை எளிய விவசாயிகள் பயிர் செய்து வரும் கோவில் நிலங்களை அவர்களே குத்தகைக்கு பயிர் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து கிராம நிர்வாக அலுவலரிடம் தங்களது கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

No comments:

Post a Comment